Thursday, January 14, 2021

டிரைவர் இல்லாத ஆட்டோமேட்டிக் கார்!

 


தானியங்கி கார் - என்றால் என்ன?

தானியங்கி கார் என்பது ஓட்டுநர் இல்லாத (driverless) அல்லது சுயமாக வாகனத்தை ஓட்டும் (self-driving) ஒரு கார் ஆகும். அதாவது தானியங்கி கார் என்பது மனித ஆபரேட்டர் இல்லாத நிலையில் பயணிக்கும்படி வடிவமைக்கப்பட்ட ஒரு வாகனம் ஆகும்.


நிறைகள்:

 

1. விபத்துக்களின் எண்ணிக்கை குறையும்!

 

ஒரு கம்பியூட்டர் வாகனத்தை கட்டுப்படுத்துவதால் தானியங்கி கார்கள் மனித பிழைகள் ஏற்படாமல் தடுக்கின்றன. எதிர்பாராத குறுக்கீடுகளுக்கு ஆளாகக்கூடிய மனிதர்களைப் போல இது கவனச்சிதறலுக்கு வாய்ப்பளிக்காது. தானியங்கி கார்கள் மற்றொரு வாகனத்திற்கு இடையேயான சரியான தூரத்தையும், நிறுத்த தூரத்தை கட்சித்தமாக தீர்மானிக்கும் என்பதால், சாலை விபத்துக்கான வாய்ப்புகள் வியத்தகு முறையில் குறையும்.

 

2. போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்கும்!

 

ஒரு குழுவில் டிரைவர் இல்லாத கார்கள் படைப்பிரிவில் பங்கேற்கின்றன. இது வாகனங்களை ஒரே நேரத்தில் பிரேக் செய்ய அல்லது துரிதப்படுத்த அனுமதிக்கிறது. பிளாட்டூன் அமைப்பு தானியங்கி நெடுஞ்சாலை அமைப்பை அனுமதிக்கிறது, இது நெரிசலைக் கணிசமாகக் குறைக்கும் மற்றும் பாதை திறனை அதிகரிப்பதன் மூலம் போக்குவரத்தை மேம்படுத்தலாம். தன்னாட்சி கார்கள் ஒருவருக்கொருவர் நன்றாக தொடர்பு கொள்கின்றன. போக்குவரத்து சிக்கல்களை ஆரம்பத்தில் அடையாளம் காண அவை உதவுகின்றன. இது சாலை சரிசெய்தலைக் கண்டறிந்து உடனடியாக மாற்றுப்பாதையை மாற்றுகிறது. இது வாகன ஓட்டிகளிடமிருந்து கை சமிக்ஞைகளையும் எடுத்து அதற்கேற்ப செயல்படுகிறது.

 

 

3. மன அழுத்தமில்லாத பார்க்கிங்!

 

தானியங்கி கார்கள் நீங்கள் இறங்கவேண்டிய இடத்தில் உங்களை இறக்கிவிட்டுவிட்டு, கண்டறியப்பட்ட காலியாக உள்ள பார்க்கிங் இடத்திற்கு நேரடியாக செல்கின்றன. இது காரை பார்க்கிங் செய்ய காலியாக உள்ள ஒரு இடத்தை தேடும் நேரத்தை சேமிக்கிறது.

 

4. உங்களுடைய நாளின் பெரும்பாலான நேரத்தை மிச்சப்படுத்தும்!

 

காரை இயக்க சிஸ்டமே கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதால், ஓட்டுநருக்கு எந்த வேலையும் இருக்காது மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த அச்சமும் இருக்காது. எனவே பயண நேரத்தின் போது பேருந்தில் அல்லது ரயிலில் அல்லது விமானத்தில் பயணிப்பது போல நீங்கள் உங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை உருவாக்கி கொள்ளலாம், உங்கள் அன்புக்குரியவர்களிடம் நேரம் செலவிடலாம் அல்லது ஓய்வு கூட எடுத்துக்கொள்ளலாம்.

 

5. அனைவருக்குமான போக்குவரத்துக்கு அணுகல்!

 

பெரும்பாலான சமயங்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாகனம் ஓட்டுவதில் சிரமப்படுகிறார்கள். தானியங்கி வாகனங்கள் பாதுகாப்பான, அதே சமயம் சிரமம் இல்லாமல் அனைவரும் அணுக கூடிய போக்குவரத்தை உறுதி செய்கின்றன.

 

 

குறைகள்:

 

1. விலை உயர்ந்தது!

 

உயர் தொழில்நுட்ப வாகனங்கள் மற்றும் உபகரணங்களின் விலை மிகவும் அதிகமாக இருக்கும். ஒரு தானியங்கி காருக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகவும், மென்பொருள், மாற்றியமைக்கப்பட்ட வாகன பாகங்கள் மற்றும் சென்சார்கள் போன்ற மிகச்சிறந்த மற்றும் மிகவும் செயல்பாட்டுப் பொருள்களைத் தேர்ந்தெடுப்பதிலும் மிகப்பெரிய செலவுகளை செய்ய வேண்டி இருக்கும். எனவே, எல்லோராலும் தானியங்கி கார்களை வாங்க முடியாது, பயணிக்கவும் முடியாது. இருப்பினும் இது தற்கால நிலைப்பாடு தான். அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு பின் தானியங்கி கார்களின் விலை குறைந்துவிடக்கூடும், அப்போது சராசரி வருவாய் ஈட்டக்கூடிய நபர்களுக்கும் கூட தானியங்கி கார்கள் சொந்தமாகலாம்.

 

2. பாதுகாப்பு சார்ந்த கவலைகள்!

 

தானியங்கி கார்கள் வெற்றிகரமாக திட்டமிடப்பட்டிருந்தாலும், எதிர்பாராத தடுமாற்றம் என்பது இன்னும் ஏற்படக்கூடிய ஒன்றாகவே உள்ளது. தொழில்நுட்பங்கள் தொடர்ச்சியாக அப்டேட் ஆகிக்கொண்டிருந்தாலும் கூட, எல்லாமே வெற்றிகரமாக முடியவதில்லை. சில நேரங்களில் சில சாதனங்கள் தவறான குறியீட்டைக் கொண்டிருக்கலாம்.

 

 

3. ஹேக்கிங் செய்யப்பட வாய்ப்புள்ளது!

 

தானியங்கி வாகனம் தொடர்ந்து உரிமையாளரின் விவரங்களைக் கண்காணிப்பதால் அவைகள் ஹேக்கர்களின் அடுத்த (வருங்காலத்தில்) முக்கிய இலக்காக இருக்கலாம். இது தனிப்பட்ட தரவின் சாத்தியமான சேகரிப்புக்கு வழிவகுக்கும்.

 

4. மனிதர்களுக்கான வேலை வாய்ப்புகளை பறிக்கும்!

 

செயற்கை நுண்ணறிவு - மனிதர்களின் பாத்திரங்களையும் பொறுப்புகளையும் மெல்ல மெல்ல கைப்பற்றி வருவதால், பெரிய எண்ணிக்கையிலான தானியங்கி வாகனங்கள் டாக்ஸி, லாரிகள் அல்லது இணை விமானிகளின் பணிகளை கூட பறிக்கலாம். ஏனெனில் அவர்களின் சேவைகள் இனியும் தேவைப்படாது. இது ஒரு குறிப்பிட்ட நாட்டின் வேலைவாய்ப்பு வீதத்தையும் பொருளாதார வளர்ச்சியையும் கணிசமாக பாதிக்கலாம்.

 

5. செயல்படாத சென்சார்கள்!

 

பெரும்பாலும் கடுமையான வானிலை நிலைகளில் சென்சார்கள் தோல்வி அடைகின்றன, பழுதாகின்றன. பனிப்புயல் அல்லது கடுமையான பனிப்பொழிவின் போது சென்சார்கள் வேலை செய்யாது. இந்த இடத்தில் தானியங்கி தொழில்நுட்பத்தையும் அவைகளின் சென்சர்களையும் நாம் எப்படி நம்புவது? இந்த துறை இன்னும் தொடர்ந்து வளர வேண்டும் மற்றும் எக்கச்சக்கமான சோதனைகளை நிகழ்த்த வேண்டும்.
சிக்னல் ஆப்பில் நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 8 தந்திரங்கள்!

 வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை அதன் பயனர்களிடம் சரியான வரவேற்பை பெறவில்லை என்றே தோன்றுகிறது, இதன் விளைவாக சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற மாற்று இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்களின் டவுன்லோட்ஸ் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
சென்சார் டவர் தரவுகளின்படி, இந்தியாவில் சிக்னல் ஆப் மிகவும் பிரபலமாகி கொண்டிருக்கிறது.

1.       1ஸ்க்ரீன் லாக் அம்சத்தினை எனேபிள் செய்வது எப்படி?

தேவையில்லாதவர்கள் உங்கள் சிக்னல் ஆப் அக்கவுண்டிற்குள் நுழைவதை தடுக்க சிக்னல் செயலியின் செட்டிங்ஸ்-இல் ஸ்க்ரீன் லாக் அம்சம் இருக்கிறது. இதற்காக சிக்னல் ஆப் பயோமெட்ரிக் அங்கீகார முறையைப் பயன்படுத்தும் பில்ட்-இன் லாக் உடன் வருகிறது.

2.       2.. ரிஜிஸ்ட்ரேஷன் பின்-ஐ எனேபிள் செய்வது எப்படி?

சிக்னல் ஆப்பின் ரிஜிஸ்ட்ரேஷன் பின் அம்சம் ஒரு பெரிய வித்தியாசத்துடன் வாட்ஸ்அப்பில் கிடைக்கும் டூ-பேக்டர் ஆத்தென்டிகேஷனைப் போன்றது. Two-factor authentication ஆனது OTP ஆக கிடைக்கும். ஆனால் சிக்னல் ஆப்பில் ரிஜிஸ்ட்ரேஷன் பின் ஆனது அதை நீங்கள் கைமுறையாக மற்றும்வரை அப்படியேதான் இருக்கும்.

3.      3சாட்களை மேலே 'பின்' செய்வது எப்படி?

சிக்னலில் ஸ்டார்டு மெசேஜஸ் அம்சம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இது பயனர்களுக்கு சாட் விண்டோவில் எந்தவொரு சாட்-ஐயும் 'பின்' செய்வதற்கான விருப்பத்தை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் நான்கு சாட்களை பின் செய்ய உதவும், மேலும் இந்த அம்சம் க்ரூப்களிலும் செயல்படுகிறது. ஆனால் நீங்கள் மெசேஜ்களை டெலிட் செய்தால், பின் சாட்களும் நீக்கப்படும்.

4.       4காண்டாக்ட் ஜாயின்டு சிக்னல்' அறிவிப்பை முடக்குவது எப்படி?

உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் உள்ள ஒருவர் சிக்னலில் சேரும்போதெல்லாம் அது சார்ந்த அறிவிப்பு உங்களுக்கு வரும், அதை தவிர்க்க, Contact Joined Signal என்கிற அம்சத்தை டிஸேபிள் செய்யவும்.

5.      5.  பிளர் பேசஸ் (Blur Faces) அம்சத்தினை இயக்குவது எப்படி?

சிக்னலில் உள்ள மற்றொரு பாதுகாப்பை மையமாக கொண்ட அம்சம் தான் - ஒரு படத்தைப் பகிர்வதற்கு முன்பு அதில் இருக்கும் முகங்களை "மங்கலாக்கும்" அம்சம். அதுவே பிளர் பேசஸ் ஆகும்.

6.       6தானாக அழிந்து போகும் புகைப்படங்கள் அம்சத்தினை இயக்குவது எப்படி?

சிக்னல் பயனர்கள் அவர்கள் ஷேர் செய்த புகைப்படங்களுக்கு ஒன் டைம் வியூ வரம்பை அமைக்கலாம். பெறுநரால் ஒருமுறை பார்க்கப்பட்டவுடன, அது இருபுறமும் தானாகவே மறைந்துவிடும்.

7.       7காண்டாக்ட்களை Verify செய்வது எப்படி?

முக்கியமான தகவல்களைக் கையாளும் பயனர்களுக்கு அவர்களின் காண்டாக்ட்களுக்கான செக்யூரிட்டி நம்பரை முன்பே சரிபார்க்கவும், சரிபார்க்கப்பட்டதாகக் குறிக்க சொல்லியும் சிக்னல் ஆப் அறிவுறுத்துகிறது. இது end-to-end encryption-க்கு கூடுதல் பாதுகாப்பு அடுக்கை சேர்க்கிறது.

8.     8.  Incognito கீபோர்ட்டை எனேபிள் செய்வது எப்படி?இந்த அம்சத்தை இயக்குவதின் மூலம் சிக்னல் ஆப்பை பயன்படுத்தும் போது நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொற்களைக் கற்றுக்கொள்வதை உங்கள் கீபோர்ட் நிறுத்திக்கொள்ளும். இது கீபோர்ட்கள் தரவைச் சேகரிப்பதைத் தடுப்பது மட்டுமல்லாமல்
, டேட்டா தனியுரிமையையும் மேம்படுத்துகிறது.Wednesday, January 13, 2021

டெலிகிராம் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 7 விசயங்கள்!

 டெலிகிராம் என்பது Android, iOS, Mac மற்றும் Windows-இல் அணுக கிடைக்கும் ஒரு மெசேஜிங் ஆப் ஆகும். இந்த ஆப் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை ஆதரிக்கிறது. டெலிகிராமில் உள்ள அனைத்து மெசேஜ்களும், வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளும் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்படுகின்றன, அதாவது மறை குறியாக்கப்பட்டவைகளாகும்.

 


01.   டெலிகிராம் ஒரு இந்திய செயலியா?

 

இல்லை! டெலிகிராம் ஒரு இந்திய ஆப் அல்ல. டெலிகிராம் மேம்பாட்டுக் குழு துபாயில் அமைந்துள்ளது. டெலிகிராமிற்கு பின்னால் உள்ள பெரும்பாலான டெவலப்பர்கள் முதலில் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்திலிருந்து வந்தவர்கள்.

 

02.   டெலிகிராம் ஆப் பயன்படுத்த பாதுகாப்பானதா?

 

டெலிகிராம் ஆப் மறைகுறியாக்கத்தை வழங்குகிறது, இருப்பினும் டெலிகிராமின் சாதாரண சாட்களுக்கு அது கிடைப்பதில்லை. மாறாக டெலிகிராமில் ஒரு பயனர் சீக்ரெட் சாட்-ஐ தொடங்கினால், அது பாதுகாப்பானது மற்றும் சேமிக்கப்படாது.

 

03.   என் காண்டாக்ட் லிஸ்டில் யாரெல்லாம் டெலிகிராம் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிவது எப்படி?

 

நீங்கள் டெலிகிராம் ஆப்பை பயன்படுத்த தொடங்கியதுமே அல்லது ஒவ்வொரு முறை உள்நுழையும் போதும், உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் யாரெல்லாம் புதிதாக டெலிகிராம் ஆப்பில் சேர்ந்தாலும், அது சார்ந்த தகவல் உங்களுக்கு கிடைக்கும். தவிர டெலிகிராம் ஆப்பிற்குள்ளேயே contacts என்கிற விருப்பத்தின் கீழ் கூட,உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் யாரெல்லாம் டெலிகிராம் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறியலாம்.

 

04.   என்னுடன் last seen-ஐ டெலிகிராமில் மறைக்க முடியுமா?

 

ப்ரைவஸி மற்றும் செக்யூரிட்டி செட்டிங்ஸ்-இல் மாற்றங்களைச் செய்வதன் மூலம் டெலிகிராமில் உங்கள் லாஸ்ட் சீனையாரெல்லாம் பார்க்கலாம் என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம்.

 

05. டெலிகிராமில் நான் 'ஆன்லைனில்' இருப்பதை யாரெல்லாம் பார்க்க முடியும்?

 

செட்டிங்ஸ் வழியாக நீங்கள் உங்களின் லாஸ்ட் சீனை யாருடனெல்லாம் பகிர்கிறீர்களோ அவர்கள் நீங்கள் ஆன்லைனில் இருப்பதை பார்க்க முடியும்.

 

05.   டெலிகிராமில் மெசேஜ்களை டெலிட் செய்ய முடியமா?

ஆம், அனுப்பப்பட்ட அல்லது பெறப்பட்ட மெசேஜ்களை தனிப்பட்ட சாட்களில் இருந்து டெலிட் செய்யலா,. இருப்பினும், க்ரூப் சாட்களில் உங்களின் மெசேஜ்களை மட்டுமே டெலிட் செய்ய முடியும். ஆனால் இரு முனைகளிலும் முழு சாட் ஹிஸ்டரியையும் டெலிட் செய்ய முடியும்.

 

07. டெலிகிராமில் எனது மொபைல் நம்பரை யாரெல்லாம் பார்க்க முடியும்?

 

டெலிகிராம் வழியாக உங்கள் தொலைபேசி எண்ணைக் வெளிப்படுத்தாமலேயே தனிப்பட்ட மற்றும் க்ரூப் சாட்களில் மெசேஜ்களை அனுப்பலாம். ஆனால் உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் இருக்கும் டெலிகிராம் பயனர்கள் உங்கள் மொபைல் எண்ணை டெலிகிராம் வழியாக காணலாம்.தமிழ்நாடு இன்ஃபர்மேஷன் கமிஷன் (TNSIC) 2021 வேலைவாய்ப்புகள் வெளியீடு

 டி.என்.எஸ்.ஐ.சி (TNSIC) Tamil Nadu Information Commission இல் 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான டி.என்.எஸ்.ஐ.சி ஆட்சேர்ப்பில் தமிழ்நாடு முழுவதும் காலியிடங்கள் உள்ளன.

 


டி.என்.எஸ்.ஐ.சி யின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் பல பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https:// www.tnsic.gov.in / என்ற டி.என்.எஸ்.ஐ.சி யின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.


விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க உள்ள இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும்.

01.டான்சிம் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான தனிப்பட்ட உதவியாளர் (Personal Assistant) பணிக்கான காலியிடங்கள்

வேலை அறிவிப்பு

விவரங்கள்

நிறுவனம்

டான்சிம்

பணி

தனிப்பட்ட உதவியாளர்

கல்வி தகுதி

எதாவது ஒரு இளங்கலை பட்டம், சுருக்கெழுத்து தட்டெச்சு (ஆங்கிலம், தமிழ்) தெரிந்தவராக இருக்க வேண்டும்

வேலைக்கான இடம்

அரியலூர்

மொத்த காலியிடங்கள்

04

வயது வரம்பு

35 க்கும் குறைவாக இருக்க வேண்டும்

சம்பள அளவு

19500 லிருந்து 62000 வரை

விண்ணப்பிக்க துவக்க தேதி

06.01.2021

விண்ணப்பிக்க இறுதி தேதி

22.01.2021

 

02.டான்சிம் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான இளம் உதவியாளர் (Junior Assistant) பணிக்கான காலியிடங்கள்

வேலை அறிவிப்பு

விவரங்கள்

நிறுவனம்

டான்சிம்

பணி

இளம் உதவியாளர்

கல்வி தகுதி

எதாவது ஒரு இளங்கலை பட்டம் மற்றும் கணினி உபயோகம் தெரிந்திருக்க வேண்டும்.

வேலைக்கான இடம்

அரியலூர்

மொத்த காலியிடங்கள்

06

வயது வரம்பு

35 க்கும் குறைவாக இருக்க வேண்டும்

சம்பள அளவு

19500 லிருந்து 62000 வரை

விண்ணப்பிக்க துவக்க தேதி

06.01.2021

விண்ணப்பிக்க இறுதி தேதி

22.01.2021

 

03.டான்சிம் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான இளம் உதவியாளர் (இ.டி.பி) (Junior Assistant (EDP)) பணிக்கான காலியிடங்கள்

வேலை அறிவிப்பு

விவரங்கள்

நிறுவனம்

டான்சிம்

பணி

இளம் உதவியாளர் (இ.டி.பி)

கல்வி தகுதி

எதாவது ஒரு இளங்கலை பட்டம் மற்றும் டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சயின்ஸ்

வேலைக்கான இடம்

அரியலூர்

மொத்த காலியிடங்கள்

02

வயது வரம்பு

35 க்கும் குறைவாக இருக்க வேண்டும்

சம்பள அளவு

19500 லிருந்து 62000 வரை

விண்ணப்பிக்க துவக்க தேதி

06.01.2021

விண்ணப்பிக்க இறுதி தேதி

22.01.2021


04.டான்சிம் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான இளம் உதவியாளர் (நிதி) (Junior Assistant (Account)) பணிக்கான காலியிடங்கள்

வேலை அறிவிப்பு

விவரங்கள்

நிறுவனம்

டான்சிம்

பணி

இளம் உதவியாளர் (நிதி)

கல்வி தகுதி

பி.காம்/ பி.பி.எ மற்றும் கணினியில் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வேலைக்கான இடம்

அரியலூர்

மொத்த காலியிடங்கள்

02

வயது வரம்பு

35 க்கும் குறைவாக இருக்க வேண்டும்

சம்பள அளவு

19500 லிருந்து 62000 வரை

விண்ணப்பிக்க துவக்க தேதி

06.01.2021

விண்ணப்பிக்க இறுதி தேதி

22.01.2021


05.டான்சிம் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான நேர காப்பாளர் (Time Keeper) பணிக்கான காலியிடங்கள்

வேலை அறிவிப்பு

விவரங்கள்

நிறுவனம்

டான்சிம்

பணி

நேர காப்பாளர்

கல்வி தகுதி

எதாவது ஒரு இளங்கலை பட்டம் மற்றும் தட்டச்சு

வேலைக்கான இடம்

அரியலூர்

மொத்த காலியிடங்கள்

02

வயது வரம்பு

35 க்கும் குறைவாக இருக்க வேண்டும்

சம்பள அளவு

5670 லிருந்து 7710 வரை

விண்ணப்பிக்க துவக்க தேதி

06.01.2021

விண்ணப்பிக்க இறுதி தேதி

22.01.2021

 

06.டான்சிம் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான ஓட்டுநர் (Driver) பணிக்கான காலியிடங்கள்

வேலை அறிவிப்பு

விவரங்கள்

நிறுவனம்

டான்சிம்

பணி

ஓட்டுநர்

கல்வி தகுதி

10 ஆம் வகுப்பு மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். (2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.)

வேலைக்கான இடம்

அரியலூர்

மொத்த காலியிடங்கள்

03

வயது வரம்பு

35 க்கும் குறைவாக இருக்க வேண்டும்

சம்பள அளவு

5680 லிருந்து 7720 வரை

விண்ணப்பிக்க துவக்க தேதி

06.01.2021

விண்ணப்பிக்க இறுதி தேதி

22.01.2021