Saturday, February 23, 2019

What is Ransomware?

How to Prevent Ransomware 2019

ரேன்சம்வேர் எனப்படும் பணம் பறிக்கும் வைரஸ் மென்பொருளைத் தடுப்பது குறித்த வழிமுறைகளை அறிந்துகொள்ளுங்கள்.
‘WannaCry’ என்ற பணம் பறிக்கும் ரேன்சம்வேர்வைரஸ் மென்பொருள் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 150 நாடுகளில் உள்ள 2 லட்சம் கணிணிகளை முடக்கியுள்ளது. அனைத்து கோப்புகளையும் முடக்கும் இந்த வைரஸ் மென்பொருள் 300 அமெரிக்க டாலர் தொகை செலுத்தினால் மட்டுமே கோப்புகளை மீட்க முடியும் என்றும் மிரட்டும்.
மூன்று நாட்களில் பணத்தை செலுத்தாவிட்டால் தொகை இரட்டிப்பாகிவிடும். அதாவது 600 அமெரிக்க டாலர்கள்! அதையும் 7 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் கோப்புகளை ஒருபோதும் மீட்கவே முடியாது.
இந்த வைரஸ் இதுவரை 150 நாடுகளில் உள்ள 2 லட்சம் கணிணிகளை முடக்கியுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளில் அரசின் சேவைகளும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.

5G Smartphone 2019 Coming Soon


 Image result for வருகிறது 5ஜி ஸ்மார்ட்போன் வானவில்

வருகிறது 5ஜி ஸ்மார்ட்போன்

கடந்த சில ஆண்டுகளில் மொபைல் போன்களின் வளர்ச்சி அபரிமிதமானது. தற்சமயம் செல்போன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம்.

இளையதலைமுறையினரைப் பொருத்தமட்டில் அனைவர் கையிலும் நான்காம் தலைமுறை அலைபேசியான 4ஜி ஸ்மார்ட் போன் ஆறாம் விரலாகி விட்டது. 
                         
     இந்த நிலையில் ஐந்தாம் தலைமுறை அலைபேசியான 5 ஜி ஸ்மார்ட்போன் அடுத்த சில மாதங்களில் அறிமுகமாக இருக்கிறது.
                                               
   வரும் பிப்ரவரி மாதம் 25 - ந் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு, பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் எனப்படும் உலகின் மிகப்பெரிய மொபைல் குறித்த மாநாடு நடக்க உள்ளது.

     அப்போது 5ஜி தொழில்நுட்பத்துடன் வெளியாக இருக்கும் போன்களை அறிமுகம் செய்ய செல்போன் நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கின்றன. இந்தத்தகவலை, தி கொரியா ஹெரால்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சாம்சங், எல்.ஜி. நிறுவனங்கள் தங்களின் 5ஜி போன்களை இம்மாநாட்டின்போது வெளியிட இருப்பதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

   ஜி7 திங்க்யூ நிறுவனம் புதிதாக ஸ்நாப்ட்ராகன் 855 பிராசசரை அறிமுகம் செய்துள்ளது. 5ஜி தொழில் நுட்பத்திற்கான அப்டேட் ஆக வெளியிடப்பட உள்ளது. எல்.ஜி. நிறுவனத்தின் புதிய 5 ஜி போன் வருகிற மே மாதம் கொரியாவிலும், அமெரிக்காவிலும் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
   
                              
   ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி போனை இந்த வருடம் ஐரோப்பாவில் வெளியிடும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஆக, 5ஜி போன் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பிப்ரவரி மாதத்தில் எதிர்பார்க்கலாம்.

Sunday, February 17, 2019

பயனுள்ள இணையதளங்கள் பகுதி - Iபயனுள்ள இணையதளங்கள்
சான்றிதழ்கள்

1) பட்டா / சிட்டா அடங்கல்

    www.eservices.tn.gov.in

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட

     www.eservices.tn.gov.in

3) வில்லங்க சான்றிதழ்

     www.tnregnet.gov.in

4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்

http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthanddeath.htm

5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்

    https://edistricts.tn.gov.in/revenue/status.html

6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்

     https://edistricts.tn.gov.in/revenue/status.html

 E-டிக்கெட் முன் பதிவு

1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
  
http://www.tnstc.in/TNSTCOnline/

http://www.irctc.co.in/

http://www.yatra.com/

 https://www.redbus.in/

2) விமான பயண சீட்டு

https://www.cleartrip.com/

 https://www.makemytrip.com/

 http://www.ezeego1.co.in/

 E-Payments (Online)

1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி

https://portal2.bsnl.in/myportal/cm.do

2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி

https://www.freecharge.in/prepaid

https://www.amazon.in/hfc/mobileRecharge

https://paytm.com/recharge

3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி

https://www.tnebnet.org/awp/login;jsessionid=jiIEwz+LSZ0oWV9GLE6umJHu

4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி

https://www.onlinesbi.com/personal/neft_rtgs_faq.html

https://www.icicibank.com/Personal-Banking/onlineservice/online-services/FundsTransfer/rtgs.page

5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி

https://www.flipkart.com/

 https://www.amazon.in/

 https://www.shopclues.com/

 6) Share Market – பங்குச் சந்தையில் online வணிகம் செய்யும் வசதி

https://www.icicidirect.com/

https://www.hdfcsec.com/

http://www.religareonline.com/

https://www.kotaksecurities.com

https://www.sharekhan.com/

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)

1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்

https://www.sbi.co.in/portal/web/student-platform

 https://www.bankofbaroda.com/education-loan.htm

 https://www.unionbankofindia.co.in/english/education-loan.aspx

 https://www.vidyalakshmi.co.in/

 https://www.ugc.ac.in/page/Educational-Loan.aspx

https://www.icicibank.com/Personal.../loans/education-loan/education-loan.page

 https://www.axisbank.com/retail/loans/education-loan/features-benefits


 2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி

 tnresults.nic.in/

 www.dge.tn.nic.in/

 dge.tn.nic.in/

 www.examresults.net/tamilnadu/

 www.dge.tn.gov.in/

3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய

http://www.textbookcorp.tn.gov.in/textbook1.php

4) இணையதளங்கள் மூலமாக 10th, 12th STD பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி

https://www.youtube.com/channel/UC7GbVKqHPXww1acL1x9DNQw/feed

 www.classteacher.com/

 www.edurite.com/

 http://cbse.nic.in/newsite/

5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய

www.kalvisolai.com/

6) UPSC/ TNPSC/ IBPS / RRB / TRB/SSC க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி

www.tnpsc.gov.in/

 https://upsc.gov.in/

 www.rrbcdg.gov.in/

 trb.tn.nic.in/

 https://ibps.in/

 https://ssc.nic.in/

7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி

 www.employmentnews.gov.in/

 https://www.naukri.com/

 https://www.manpowergroup.co.in/

 https://www.monsterindia.com/

8) இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய

 www.ssb.nic.in/

 bsf.nic.in/

 www.joinindianarmy.nic.in/

9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய

https://www.joinindiannavy.gov.in/

10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி

https://www.skype.com/en/

 https://www.google.com/gmail/

 https://onlinechat.co.in


Saturday, February 9, 2019

Top 6 Advanced Humanoid robots 2019

Top 6 Advanced Humanoid Robots


1.      சோபியா (Sophia)         சோபியா (Sophia), ஆன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மிகவும் மேம்பட்ட இயந்திர மனிதத் தானியங்கி படைப்பாகும். முனைவர். டேவிட் ஆன்சன் என்பவரால் 2013 ஆம் ஆண்டு ஆன்சன் தானியங்கியல் நிறுவனம் நிறுவப்பட்டது. இவரே இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலரும் ஆவார். உலகின் குடியுரிமை பெற்ற முதல் இயந்திர மனித தானியங்கி என்ற பெருமை சோபியாவிற்கு கிடைத்துள்ளது.

2.      அசிமோ (Asimo)                அசிமோ (ASIMO) ஹோண்டா நிறுவனம் இந்த அசிமோ ரோபோவை உருவாக்கியுள்ளது. மிகவும் அட்வான்ஸ்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இது மனிதர்களை போலவே நடமாடி செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து தன் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் 25 லட்சம் டாலர்கள்

3.      அட்லஸ் (Atlas)


        இந்த பாஸ்டன் டைனமிக்ஸ் பார்கர் அட்லஸ் ரோபோ ஒரு பிட் இயக்கவும் மற்றும் குதிக்க முடியும். கையில் துப்பாக்கியால் என்ன செய்ய முடியும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். தேவையான AI கொண்டு, நீங்கள் ஒரு தவறு செய்தால், ஒரு ரோபோ உங்களை தன்னிகரமாக கைது செய்ய வரலாம். ஆனால் குறிப்பாக போர்க்களத்தில் போன்ற ஒரு supple விஷயம் பயனுள்ளதாக இருக்கும். அது நிறைய வீரர்களை சேமிக்கிறது. அவர்கள் மட்டுமே காயமடைய முடியும். நன்றாக, ஒருவேளை நாம் ஒரு நல்ல பேட்டரி பேக் பார்த்துக்கொள்ள வேண்டும், ஆனால் அது நேரம் ஒரு விஷயம்.

4.      ரோமியோ (Romeo)


        மனிதர்களுக்கு உதவி செய்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த ரோமியோ ரோபோ. கார்பன் பைபர் மற்றும் ரப்பர் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் இதன் எடை மிகவும் குறைவு. இந்த ரோபோவால் பார்க்கவும், கேட்கவும், பேசவும் முடியும். மேலும் இது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

5.      ஐசியூபி (ICUB)


        ஐசியூபி என்ற இந்த ரோபோவை இத்தாலியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உருவாக்கியுள்ளது. ரோபோக்களில் செயற்கை அறிவு குறித்த ஆய்வு மேற்கொள்ள் இந்த ரோபோ தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுடனும் மனித இனத்துடனும் பாதுகாப்பான முறையில் பழக இதற்கு கற்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவின் விலை 2.7 லட்சம் டாலர்கள்

6.      குராட்டஸ் (Kuratas)


       குராட்டஸ் என்ற இந்த ரோபோவை சுடோபசி ஹெவி இண்டஸ்ட்ரி என்ற ஜப்பான் நிறுவனம் உருவாக்கியுள்ளது. வி-சைடோ என்ற இயக்க அமைப்பின் மூலம் இந்த ரோபோ செயல்படுகிறது. மேலும் இந்த ரோபோவை மொபைலில் உள்ள செயலி மூலமும் இயக்கலாம். இந்த ரோபோ தற்போது அமேசானில் விற்பனைக்கு உள்ளது. சுமார் 5 டன் எடை கொண்ட இந்த ரோபோவின் விலை சுமார் 13 லட்சம் டாலர்கள்.