Friday, September 11, 2020

தமிழ்நாடு அஞ்சல் துறையில் 2020 ஆண்டுக்கான கிராம அஞ்சல் ஊழியர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

செப்டம்பர் 01, 2020 - இந்திய அஞ்சலக துறையில் கீழ் வரும் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வேலை பார்த்த முன்அனுபவம் உள்ள மற்றும் முன்அனுபவம் இல்லாத என எல்லாரும் இதில் அப்ளை செய்யலாம்.

 • மொத்த காலியிடங்கள்: 3,162
 • பணி: Gramin Dak Sevaks
 • தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அடிப்படை கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை மாநிலை மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். 10, பிளஸ் 2 மற்றும் மேல் படிப்புகளில் கணினி அறிவியலை ஒரு பாடமாக படித்திருந்தால் கணினி சான்றிதழ் அவசியம் இல்லை.
 • வயது வரம்பு: 01.09.2020 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
 • சம்பளம்: மாதம் ரூ.10,000 - 14,500 வழங்கப்படும்.
 • தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான பட்டியல் தேர்வு செய்யப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 • விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி மற்றும் ஆண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
 • விண்ணப்பிக்கும் முறை: https://appost.in/gdsonline என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2020

Monday, September 7, 2020

PUBG-க்கு தரமான பதில் FAU-G எனும் Made in India கேம் அறிமுகம்

தடை செய்யப்பட்ட PUBG மொபைல் கேமிற்கு தரமான பதிலடியாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட FAU-G கேம் அறிமுகம்.ஆம்
, PUBG மொபைலுக்கான இந்தியாவின் பதில் FAU-G ஆகும். இந்த புதிய கேமின் டெவலப்பர்கள் PUBG மொபைல் விசுவாசிகளை மனதிற்கொண்டு, அவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பல வேலைகளை செய்து இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

FAU-G எதைக் குறிக்கிறது என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், இதன் அர்த்தம் அச்சமற்ற மற்றும் ஐக்கிய காவலர்கள்என்பதாகும், அதவது ஆங்கிலத்தில்-Fearless and United-Guards ஆகும்.

மற்றொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால் PUBG மொபைலைப் போலன்றி, FAU-G க்கான வருமானம் உன்னதமான காரணங்களுக்காக இயக்கப்படும். இந்த கேமின் வருவாயில் 20 சதவீதம் பாரத் கே வீர் அறக்கட்டளைக்கு அனுப்பப்படும் என்று அக்‌ஷய் குமார் கூறியுள்ளார். எனவே, நீங்கள் இந்த கேமில் ஏதேனும் பர்சேஸ் செய்தால், உங்கள் கட்டணத்தின் ஒரு பகுதி அராணுவ வீரர்களுக்கு சென்றடையும் என்று அர்த்தம்.

AU-G மட்டும் தானா?

FAU-G என்பது PUBG மொபைலுக்கான வரவிருக்கும் ஒரு மாற்றாக இருந்தாலும், ஏற்கனவே இலவசமாக அணுக கிடைக்கும் சில தரமான பப்ஜி மொபைல் மாற்று கேம்களும் உள்ளன. ஆட்டோவை கால் ஆஃப் டூட்டி மொபைல் ஒன்றாகும், இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS-இல் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.

இந்த கேம் அடிப்படையில் PUBG மொபைலைப் போன்றது, ஆனால் இன்னமும் பலவிதமான போட்டிகளை நடத்த சிறந்த கிராபிக்ஸ் மற்றும் கூடுதல் மேப்களை கொண்டு வருகிறது.

Sunday, September 6, 2020

ஆன்லைன் வழியாக Employment Cardல் திருத்தங்கள் செய்வது எப்படி?

ஆன்லைன் வழியாக Employment Cardல் உங்க informationயை Edit செய்து Update செய்வது எப்படி என்று இந்த பக்கத்தில் பார்ப்போம்.


 1. Google ஐத் திறந்து tnvelaivaippu ஐத் தேடுங்கள், பின்னர் முதல் இணைப்பைக் கிளிக் செய்க.
 2. உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைக. பயனர் ஐடி உங்கள் வேலைவாய்ப்பு அட்டை எண் மற்றும் கடவுச்சொல் உங்கள் பிறந்த தேதி.
 3. இப்போது உங்கள் திரையில் உங்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டைத் தோன்றும்.
 4. நீங்கள் வேலைவாய்ப்பு அட்டையை Print செய்ய விரும்பினால் Print id Card என்பதைக் கிளிக் செய்க.
 5. நீங்கள் Qualificationயை சேர்க்க விரும்பினால், Add Qualification என்பதைக் கிளிக் செய்க.
 6. நீங்கள் Contacts மாற்ற விரும்பினால், modify contacts என்பதைக் கிளிக் செய்க.
 7. Modify Contactsயை கிளிக் செய்யுங்கள்.
 8. உங்கள் அனைத்து தகவல்களும் திரையில் தோன்றும்.
 9. Reset என்ற Optionயைக் கிளிக் செய்து உங்கள் Personal Details, Contact Details யை மாற்றலாம்.
 10. Qualification Detailsயைக் கிளிக் செய்யுங்கள், அதில் Radio Buttonயைக் கிளிக் செய்து நீங்கள் திருத்த வேண்டிய Qualificationயைக் கிளிக் செய்யுங்கள். மேலே உங்கள் Qualification details திரையில் தோன்றும். அதில் Edit செய்து modify என்ற Optionயைக் கிளிக் செய்து மாற்றலாம்.
 11. எல்லாம் முடித்த பிறகு Save Button யைக் செய்யவும்.Friday, September 4, 2020

தேசிய வீட்டு வசதி வங்கியில் 2020ம் ஆண்டுக்கான பணியிட அறிவிப்பு - இறுதி நாள் 18 செப்டம்பர் 2020

தேசிய வீட்டு வசதி வங்கியில் காலியாக உள்ள 16 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய வங்கி வேலையை விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆகஸ்ட் 29 2020 முதல் செப்டம்பர் 18 2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பதாரர்களின் தகுதி விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


அமைப்பின் பெயர்

தேசிய வீட்டு வசதி வங்கி

பணியின் பெயர்

உதவி மேலாளர் (Scale I)

காலியிடங்கள்

16

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

பணியிடம்

இந்தியா

வேலை பிரிவு

வங்கி பணி

விண்ணப்பங்கள் அனுப்ப முதல் நாள்

29 ஆகஸ்ட் 2020

விண்ணப்பங்கள் அனுப்ப இறுதி நாள்

18 செப்டம்பர் 2020

அதிகாரப்பூர்வ வலைதளம்

www.nhb.org.in

காலியிட விவரம்

உதவி மேலாளர் (Scale I) - 16 இடங்கள்
SC 04
OBC (NCL) 03
EWS 03
GEN 06

கல்வி தகுதி

Possess a Chartered Accountant/ ICWAI/ CS/ சம்பந்தப்பட்ட பட்டயப்படிப்பில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் (SC/ST/PwBD 55 சதவீதம் போதுமானது) முதுகலை பட்டயப்படிப்பு 55 சதவீதம் மதிப்பெண் (SC/ST/PwBD 50 சதவீதம் போதுமானது) இவை அங்கீகரிக்கப்பட்ட பிரிவில் படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

குறைந்தது 21 வயது அதிகமாக 30 வயது
வயது தளர்வு
SC/ ST - 5
வருடங்கள்
முன்னாள் இராணுவத்தினர் ( ECOs/SSCOs உட்பட) - 5வருடங்கள்
பிற்படுத்தப்பட்டோர் - 3 வருடங்கள்

மாற்றுத்திறனாளிகள்

PwBD (GEN) – 10 Years

PwBD (SC/ST) – 15 Years

PwBD (OBC) – 13 Years

தேர்வு செய்யும் முறை

தேசிய வீட்டுவசதி வங்கியில் பணியிடங்களை பூர்த்தி செய்ய செயல் திறன் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் ஆன்லையின் மூலம் செலுத்தலாம். மேலும், Credit card/debit card ஆகியவை பயன்படுத்தியும் செலுத்த அனுமதி உண்டு. ஒவ்வொரு பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் மாறுபடும்.
SC/ ST/ PwBD - 175
ரூபாய்
மற்ற பிரிவினருக்கு - 850 ரூபாய்

சம்பள விவரம்

23,700 ரூபாயிலிருந்து 48,330 ரூபாய் வரை

விண்ணப்பிக்கும் முறை

* முதலில், அறிவிப்பை முழுவதும் படிக்கவும்.
*
அதிகாரப்பூர்வ விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.
*
தவறு இல்லாமல் விவரங்களை பூர்த்தி செய்யவும்.
*
புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் ஸ்கேன் காப்பி பதிவேற்றவும்.
*
ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் மற்றும் பரிமாற்றக் கட்டணத்துடன்   செலுத்தவும்.
*
விவரங்களை சமர்பிக்கவும்.
*
பின் ஒரு நகல் எடுத்துக் கொள்ளவும்.

ஸ்பேம் இமெயில் (SPAM E-Mail) மற்றும் விளம்பர இமெயில்களின் தொல்லை இருக்காது! ஏன்? எப்படி?

ஒருகாலத்தில் தொழில்முறை பணிகளின் அடிப்படையில் மட்டுமே செயல்பட்டு வந்த இமெயில்கள் (மின்னஞ்சல்கள்) இன்று வங்கி "கூட்டம் கூடும் இடத்தில் கடை போட வேண்டும்" என்பதை நன்கு அறிந்த வியாபாரிகள் மற்றும் சந்தைப்படுத்துபவர்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான விளம்பரங்களை மின்னஞ்சல் செய்திகளாக அனுப்ப தொடங்கின, அவைகளைத்தான் ஸ்பேம் மெயில் என்போம், அதாவது குப்பை மின்னஞ்சல். குறிப்பிட்ட நபருக்கு மட்டும் அனுப்பப்படாமல் மொத்தமாக மற்றும் கேட்காமலேயே அனுப்பப்படும் மெயில்கள் என்று அர்த்தம்.

ஒருபக்கம் வியாபாரிகள் கடை போட மறுகையில், சத்தம் போடாமல் பல வகையான மின்னஞ்சல் மோசடிகளும் நடக்கின்றன. ஹேக்கர்கள் ஸ்பேம் மெயில் வழியாக பயனர்களின் தரவுகள் அல்லது பணத்தின் மீது இலக்கு வைக்கின்றனர். ஆகமொத்தம் ஸ்பேம் மெயில்கள் என்றாலே தொல்லை அல்லது சிக்கல் தான்.

ஆகையால் தான் இதுபோன்ற ஸ்பேம் மெயில்களிடம் இருந்து நிரந்தரமாக தப்பிக்க அல்லது மொத்தமாக டெலிட் செய்ய ஜிமெயிலில் மொத்தம் மூன்று வழிகள் உள்ளன. நீங்கள் ஸ்பேம் மெயில்களை பிளாக் செய்ய விரும்பினால் உங்களுக்கு சில 3 முன்நிபந்தனைகள் உள்ளன:

·         உங்களின் இணைய இணைப்பு நன்றாக வேலை செய்ய வேண்டும்.

·         உங்களின் கூகுள் அக்கவுண்ட்டிற்குள் நுழைவதற்கான லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் அறிந்திருக்க வேண்டும்.

·         ப்ரவுஸர் கொண்டிருக்கும் பிசியோ அல்லது மேக்கோ உங்களிடம் இருக்க வேண்டும்.

வழிமுறை 01: குறிப்பிட்ட அனுப்புநரைத் பிளாக் செய்யலாம்!

ஒரு குறிப்பிட்ட அனுப்புநர்களிடமிருந்து நீங்கள் அடிக்கடி விளம்பர மெயில்களை பெறும் பட்சத்தில், ஒரு குறிப்பிட்ட அனுப்புநரிடமிருந்து வரும் மின்னஞ்சல்களை மட்டும் பிளாக் செய்வதற்கான வழியை ஜிமெயில் வழங்குகிறது. அதற்கு,

1. அதை செய்ய, www.gmail.com வழியாக லாகின் செய்யவும்.

2. அந்த குறிப்பிட்ட அனுப்புநரிடமிருந்து வந்த மின்னஞ்சலைக் கண்டுபிடித்து திறக்கவும்

3. ஸ்க்ரீனில் காட்சிப்படும் மூன்று செங்குத்தான புள்ளிகளைக் கிளிக் செய்து, பின்னர் பிளாக்விருப்பத்தை கிளிக் செய்யவும்.

4. பாப்அப்பில் மீண்டும் பிளாக் பொத்தானைக் கிளிக் செய்யவும், அவ்வளவுதான்.

வழிமுறை 02: பில்டர்களை பயன்படுத்தி ஸ்பேம் மெயில்களை பிளாக் செய்யலாம்!

1. இதைச் செய்ய, உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டிற்குள் உள்நுழைந்து டிராப்-டவுன் பட்டனை கிளிக் செய்யது சர்ச் பாருக்குள் செல்லவும்

2. இப்போது, குறிப்பிட்ட அனுப்புநரின் பெயர் அல்லது மின்னஞ்சல் ஐடியை ‘To-வில் டைப் செய்து, பின்னர் கிரியேட் பில்டர் என்பதை கிளிக் செய்யவும்.

3. அடுத்த கட்டத்தில், கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து பெறப்பட்ட அனைத்து மின்னஞ்சல்களையும் நிரந்தரமாக நீக்க டெலிட் இட்என்ற விருப்பத்தைத் தேர்வுசெய்க, அவ்வளவுதான்.

வழிமுறை 03: மின்னஞ்சல்களைத் தடுக்க அல்லது நீக்க கீவேர்ட்களை பயன்படுத்தவும்!

இதைச் செய்ய, உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டிற்குள் உள்நுழைந்து டிராப்-டவுன் பட்டனை கிளிக் செய்யது சர்ச் பாருக்குள் செல்லவும், அங்கே '‘Has the word' என்கிற பிரிவின் கீழ் Promotions, sale, discounts, offers, free, won போன்ற கீவேர்ட்களை டைப் செய்து கிரியேட் பில்டர் என்கிற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள், பின்னர் டெலிட் இட் என்பதை கிளிக் செய்யவும்.