Wednesday, October 14, 2020

ரேஷன் கார்டில் உங்க மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி?

ரேஷன் கார்டில் உங்க மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும் ஆனால் ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது.

மண்டல அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்று கடைக்காரர் கூறுவார். ஆனால் அது தேவையில்லை. 1967 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு “நீங்கள் குடும்ப அட்டை உடையவர் என்றால் எண் 2யை அழுத்தவும்” என்பதற்கு 2யை அழுத்தினால் அடுத்து “சேவை அதிகாரி உங்களிடம் பேச எண் 9யை அழுத்தவும்” என்பதற்கு எண் 9 அழுத்தினால் அடுத்து சேவை அதிகாரி உங்களிடம் பேசுவார்.

அவர் உங்க ரேஷன் கார்டில் மேலே உள்ள எண்ணை கேட்பார். எ.கா. PHHRICE 333819711110 என்ற எண்ணை சொல்லவும். பின்பு குடும்ப அட்டையில் உள்ள ஒருவரின் ஆதார் எண்ணை கேட்பார். அதையும் தெரிவிக்க வேண்டும். நீங்கள் போன் செய்வதற்கு முன் ரேஷன் கார்டையும் ஆதார் கார்டையும் கையில் வைத்திருக்க வேண்டும்

இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொன்னவுடன் நீங்கள் விரும்பிய மொபைல் நம்பரை பதிவு செய்யலாம் அல்லது மாற்றலாம். அடுத்த 2 நிமிடங்களில் உங்கள் மொபைல் நம்பர் ஆக்டிவேட் ஆகிவிடும்.



*#62# ன்னு டைப் செய்தால் Call Forwarding ன்னு வருதா? சரி செய்வது எப்படி?

 


வழி 1:

Most devices should have settings like those below.

1.    Open the Phone app.

2.    Tap the 3-dot menu button or the 3-line menu button.

3.    Look for “Call Forwarding” or “More settings”

4.    Tap 'Call forwarding'

5.    Select voice calls.

6.    Make sure all options are turned OFF.

வழி 2:

1.    Type *#62# then press call button.

2.    If you get “Call Forwarded” message then you should go to third step.

3.    If you like to disable call forwarding press ##002# then call button or Press ##21# then call button.

4.    You got “Call Forwarding Erase Successful” message.



Tuesday, October 13, 2020

இலவசமாக கிடைக்கும் 1 முதல் 12 ஆம் வகுப்பு e-books; டவுன்லோட் செய்வது எப்படி?

 ஆன்லைன் வழியாக இலவசமாக கிடைக்கும் NCERT  மற்றும் சமச்சீர் இ-புத்தங்களை டவுன்லோட் செய்து, திறப்பது எப்படி?


தேசிய கல்வி
, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT - என்.சி.இ.ஆர்.டி) மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்திலிருந்து புத்தகங்களின் டிஜிட்டல் நகலை இலவசமாக பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கும் இ-புக் (e-book) வசதியை வழங்குகிறது.

இந்த சேவை முதல் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் மற்றும் ஸ்டெடி மெட்டீரியல்களை அவர்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக வழங்குகிறது.

எனவே, இந்த புத்தகங்களை எவ்வாறு பதிவிறக்குவது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், இதோ அதற்கான படிப்படியான எளிய வழிமுறைகள்:

பின்வரும் வழிமுறைகளை தொடர்வதற்கு முன், எப்போதும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து இ-புத்தகங்களைப் பதிவிறக்குவது தான் நல்லது என்று பரிந்துரைக்க விரும்புகிறோம். ஏனெனில் அதிகாரப்பூர்வ வலைத்தளமானது சமீபத்திய சிலபஸ் மற்றும் கரிக்குலமை அப்டேட் செய்து கொண்டே இருக்கும். மேலும், ஒரு புத்தகத்தின் ஒரு குறிப்பிட்ட சேப்டரை பதிவிறக்குவதற்கான வாய்ப்பையும் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழங்கும்.

என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களை ஆன்லைனில் பதிவிறக்குவதற்கான வழிகாட்டி இதோ:

1. ‘https://ncertbooks.ncert.gov.in’ என்கிற வலைத்தளத்திற்குள் நுழையவும்.

2. லாக்-இன் மற்றும் ரிஜிஸ்டர் பிரிவுக்கு கீழே காணப்படும் ‘View and Download eBooks Free பட்டனை கிளிக் செய்யவும்.

3. பின்னர் அது உங்களை வலைத்தளத்தின் textbook பக்கத்திற்கு கொண்டு செல்லும்.

4. அங்கே class, subject மற்றும் book title போன்றவைகளை தேர்ந்தெடுத்து ‘Go’ பட்டனை கிளிக் செய்யவும்.

5. இப்போது அந்த பக்கம் chapter index உட்பட முழு புத்தகத்தை இடது பக்கமாகவும் மற்றும் Book preview-வை வலப்புறமும் காட்சிப்படுத்தும்.

6. ஓவர் கிளிக் செய்வதன் மூலம் குறிப்பிட்ட சேப்டரை ப்ரிவியூ செய்ய முடியும் அல்லது கொஞ்சம் கீழே ஸ்க்ரோல் செய்ய முழு புத்தகத்தையும் பதிவிறக்க உதவும் Download complete book இணைப்பை கிளிக் செய்யலாம். அவ்வளவுதான்!

சமச்சீர் புத்தகங்களை ஆன்லைனில் பதிவிறக்குவதற்கான வழிகாட்டி இதோ:

1. ‘https://tnscert.gov.in’ என்கிற வலைத்தளத்திற்குள் நுழையவும்.

2. லாக்-இன் மற்றும் ரிஜிஸ்டர் பிரிவுக்கு கீழே காணப்படும் ‘View and Download eBooks Free பட்டனை கிளிக் செய்யவும்.

3. பின்னர் அது உங்களை வலைத்தளத்தின் textbook பக்கத்திற்கு கொண்டு செல்லும்.

4. அங்கே class, subject மற்றும் book title போன்றவைகளை தேர்ந்தெடுத்து ‘Go’ பட்டனை கிளிக் செய்யவும்.

5. இப்போது அந்த பக்கம் chapter index உட்பட முழு புத்தகத்தை இடது பக்கமாகவும் மற்றும் Book preview-வை வலப்புறமும் காட்சிப்படுத்தும்.

6. ஓவர் கிளிக் செய்வதன் மூலம் குறிப்பிட்ட சேப்டரை ப்ரிவியூ செய்ய முடியும் அல்லது கொஞ்சம் கீழே ஸ்க்ரோல் செய்ய முழு புத்தகத்தையும் பதிவிறக்க உதவும் Download complete book இணைப்பை கிளிக் செய்யலாம். அவ்வளவுதான்!



Friday, October 9, 2020

விவசாய நிதியுதவியை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி?

 


பிஎம் கிசான் திட்டம் என்றால் என்ன?

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. 2019-20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தகுதியுடையவர்கள் - தகுதியற்றவர்கள் யார் யார்?

பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதேநேரம், நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை.

எப்படி விண்ணப்பிப்பது?

பிஎம் கிசான் நிதியுதவியைப் பெற விரும்பும் விவசாயிகள் முதலில் மாநில அரசு அல்லது உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைத்த நோடல் அதிகாரியை அணுக வேண்டும். பொதுச் சேவை மையங்களில் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளை பதிவு செய்து இத்திட்டத்தில் பயன்பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளைப் பதிவு செய்வதற்கான முழுப் பொறுப்பும் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் உள்ளது. பி.எம் கிசான் தளத்திலும் விவசாயிகள் நேரடியாக இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .

என்னென்ன ஆவணங்கள் தேவை?

இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, குடியுரிமை சான்றிதழ், நில உரிமையாளரின் ஆவணங்கள் மற்றும் ஜன தன் வங்கி கணக்கு விவரங்கள் தேவைப்படும். ஆன்லைன் விண்ணப்பத்தின் போது, பிரதமர் கிசான் வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் ஃபார்மர்ஸ் கார்னர்என்ற ஒரு பிரிவு உள்ளது . இந்த போர்டல் மூலம் விவசாயிகள் தங்களை பதிவு செய்ய வேண்டும். அவர்கள் தங்களது பெயரைத் திருத்தம் செய்ய இந்த போர்ட்டலையும் பயன்படுத்தலாம். நிதியுதவியின் தற்போதைய நிலை குறித்த தகவல்களையும் இந்தப் பக்கத்தில் விவசாயிகள் தெரிந்துகொள்ளலாம்.

எப்போது பணம் கிடைக்கும்?

விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இரண்டாம் தவணை நிதியுதவி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தகுதியுள்ள விவசாயிகள் அனைவருக்கும் தலா ரூ.2,000 நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்துக்கான முதல் தவணை நிதி ஏப்ரல் மாதத்தில் பட்டுவாடா செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 9.85 கோடி விவசாயிகள் பயன்பெற்றுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.



Samsung Galaxy F41 அறிமுகம்: தரமான பட்ஜெட் விலை; அக்.16 முதல் விற்பனை!

 சாம்சங் அதன் எஃப் சீரிஸின் கீழ் தனது முதல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அது சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஆகும்.

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. என்ன விலை, எப்போது முதல் விற்பனை, என்னென்ன அம்சங்கள், இதோ முழு விவரங்கள். சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன் சாம்சங்கின் புதிய கேலக்ஸி எஃப்-சீரிஸின் முதல் மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் சிங்கிள் டேக் அம்சத்துடன் 64 மெகாபிக்சல் இமேஜ் சென்சார், வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்புடன் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி போன்ற மிரட்டலான அம்சங்கள் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 - டிஸ்பிளே, ரேம் மற்றும் ப்ராசஸர்:



டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த ஒன் யுஐ கோர் உடன் இயங்குகிறது. இது 6.4 இன்ச் அளவிலான புல் எச்டி + சூப்பர் அமோலேட் இன்பினிட்டி-யு டிஸ்ப்ளே (நிறுவனம் இதை வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் என்கிறது) 420 நிட் வரை என்கிற பீக் ப்ரைட்னஸ் உடன் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், எக்ஸினோஸ் 9611 SoC உள்ளது, இது 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த SoC பல்வேறு சாம்சங் கேலக்ஸி எம்-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இயக்கும் ஒரு ப்ராசஸர் ஆகும், அவைகளில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் ஸ்மார்ட்போனும் அடங்கும்.

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 - ரியர் மற்றும் செல்பீ கேமராக்கள்:

கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. மேலும் இந்த கேமரா அமைப்பில் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் உள்ளது, இது அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 123 டிகிரி பீல்ட் ஆப் வியூவை வழங்குகிறத மற்றும் லைவ் போகஸ் ஆதரவுடன் 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் உள்ளது. இது 4 கே வீடியோ பதிவுகளையும் ஆதரிக்கிறது. செல்பீக்களுக்காக இதில் 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது, இதுவும் லைவ் போகஸ் ஆதரவுடன் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 - கனெக்டிவிட்டி, சென்சார்கள், பேட்டரி:



பின்புறத்தில் கைரேகை சென்சாரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி மாற்றம் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும், சேமிப்பக விரிவாக்கத்திற்காக 512 ஜிபி வரை மெமரி நீடிப்பை வழங்கும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன்128 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜும் கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போனின் இந்த மொத்த அமைப்பும் ஒரு 6,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது பாஸ்ட் சார்ஜ் செய்வதற்கான ஆதரவுடன் பேக் செய்கிறது - 15W சார்ஜர் பெட்டியில் தொகுக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளமைக்கப்பட்ட பேட்டரி 21 மணிநேர ப்ரவுஸிங் நேரம் அல்லது 48 மணிநேர குரல் அழைப்பை ஒரே சார்ஜில் வழங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடைசியாக, இந்த ஸ்மார்ட்போன் அளவீட்டில் 8.9 மிமீ தடிமன் மற்றும் 191 கிராம் எடையும் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 - விலை மற்றும் விற்பனை தேதி:


புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது இந்தியாவில் ரூ.16
,999 க்கும், இதன் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.17,999 க்கும் அறிமுகமாகி உள்ளது. சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன் ஆனது ஃப்யூஷன் கிரீன், ஃப்யூஷன் பிளாக் மற்றும் ஃப்யூஷன் ப்ளூ கலர் விருப்பங்களில் வருகிறது. இது வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி முதல், பிளிப்கார்ட்டில் நடக்கும் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ரூ.15,499 என்கிற சலுகை விலையில் வாங்க கிடைக்கும்.