ரேஷன் கார்டில் உங்க மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும் ஆனால் ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது.
மண்டல அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்று கடைக்காரர் கூறுவார். ஆனால் அது தேவையில்லை. 1967 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு “நீங்கள் குடும்ப அட்டை உடையவர் என்றால் எண் 2யை அழுத்தவும்” என்பதற்கு 2யை அழுத்தினால் அடுத்து “சேவை அதிகாரி உங்களிடம் பேச எண் 9யை அழுத்தவும்” என்பதற்கு எண் 9 அழுத்தினால் அடுத்து சேவை அதிகாரி உங்களிடம் பேசுவார்.
அவர் உங்க ரேஷன் கார்டில் மேலே உள்ள எண்ணை கேட்பார்.
எ.கா. PHHRICE 333819711110 என்ற எண்ணை சொல்லவும்.
பின்பு குடும்ப அட்டையில் உள்ள ஒருவரின் ஆதார் எண்ணை கேட்பார். அதையும் தெரிவிக்க
வேண்டும். நீங்கள் போன் செய்வதற்கு முன் ரேஷன் கார்டையும்
ஆதார் கார்டையும் கையில் வைத்திருக்க வேண்டும்
இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொன்னவுடன்
நீங்கள் விரும்பிய மொபைல் நம்பரை பதிவு செய்யலாம் அல்லது மாற்றலாம். அடுத்த 2
நிமிடங்களில் உங்கள் மொபைல் நம்பர் ஆக்டிவேட் ஆகிவிடும்.