ஆதார்கார்டு தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்!

 இந்த காலக்கட்டத்தில் Bank account ல் தொடங்கி ration card, சிலிண்டர் வாங்கிறது, post office account open பண்றது, குழந்தை பிறப்பு, இறப்பு சான்றிதழ் வரைக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. ஒரு வேளை இந்த ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் என்ன செய்வது? ஆதார் எண்ணை கண்டுப்பிடிப்பது எப்படி? மற்றும் ஆதார் கார்டை டவுன்லோடு செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெளிவாகப் பார்க்கலாம்.

ஆதார் எண்ணை கண்டுப்பிடிப்பது எப்படி?

1. Google searchல் Aadhar card என்று type செய்து Search பண்ணுங்க. Uidai.gov.in என்ற website link யைக் கிளிக் பண்ணுங்க.

2. My Aadharல் Retrieve or forgotten UID/EID என்ற optionயைத் தேர்வு செய்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Form யை fill செய்து Submit செய்வதன் மூலம் நம் Aadhar Number யை நம்முடைய mobile numberக்கோ அல்லது E-mail மூலமாகவோ பெறலாம்.

Form ல் தனிப்பட்ட விவரங்கள், பெயர், பதிவு செய்த மொபைல் எண் அல்லது மெயில் ஐடி-யை கொடுக்க வேண்டும். அதன் பிறகு கேப்ட்சா எழுத்துகளை சரியாக பதிவு செய்து Send OTP என்பதை கொடுக்க வேண்டும். இது ஆறு இலக்க ஓடிபி மொபைல் எண்ணுக்கு வரும். அதனை பதிவு செய்ய வேண்டும்.

எப்படி டவுன்லோட் செய்வது?

1. டவுன்லோட் ஆதார் என்ற ஆப்சன் ஆதார் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது ஆதார் புதியதாக அப்ளை செய்தவர்களுக்கு ஆதார் கார்டு வரும் முன்னரே தேவைப்பட்டால், டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதற்காக நீங்க https://uidai.gov.in/ என்ற இணையத்திற்குள் சென்று, அங்கு get aadhaar என்ற ஆப்சனில் உள்ள download aadhaar என்பதை கிளிக் செய்யவும். அதில் UID, EID அல்லது VID என்ற ஆப்சனில் ஒன்றை கிளிக் செய்யவும். நீங்கள் ஆதார் நம்பரை தேர்வு செய்கிறீர்கள் எனில், ஆதார் நம்பரை கொடுத்து கிளிக் செய்யவும்.


2. அதன் பிறகு உங்களது தனிப்பட்ட விவரங்கள், பெயர், பதிவு செய்த மொபைல் எண் அல்லது மெயில் ஐடி-யை கொடுக்க வேண்டும். அதன் பிறகு கேப்ட்சா எழுத்துகளை சரியாக பதிவு செய்து Send OTP என்பதை கொடுக்க வேண்டும். இது ஆறு இலக்க ஓடிபி மொபைல் எண்ணுக்கு வரும். அதனை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அல்லது மெயிலுக்கு ஆதார் எண் வந்திருக்கும். இதன் மூலம் உங்களது aadhaar நம்பரை தெரிந்து கொள்ளலாம். இதை வைத்து தொலைந்துபோன ஆதார் கார்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.





Tamil Tech Solution

Hi Friends, Get the best how to tutorials for mobile devices and technology. Tamil Tech Solution offers latest tech news, tips, tricks, advices and more on smart phones, tablets, laptops and computers. Information technology is concerned with improvements in a variety of human and organizational problem-solving endeavors, through the design, development and use of technologically based systems and processes that enhance the efficiency and effectiveness of information in a variety of strategic, tactical and operational situations.

Post a Comment

Previous Post Next Post