மொபைல் நம்பர் இல்லாமல் ஆன்லைன் வழியாக ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்யலாமா?

 பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமல் ஆதார் கார்டைப் பதிவிறக்கம் செய்வது சாத்தியமில்லை என்று நினைக்கும் பல பேரில் நீங்களும் ஒருவர் என்றால், மன்னிக்கவும் அது முற்றிலும் தவறான கருத்து உள்ளது.
ஆதார் உடன்பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் இல்லாமல் ஆன்லைன் வழியாக ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்யலாமா? என்கிற கேள்விக்கு - ஆம்! செய்யலாம் என்கிற பதில் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்!

ஏனெனில் வழக்கமாக, மொபைல் எண் இல்லாமல் ஆதார் கார்டைப் பதிவிறக்குவது சாத்தியமில்லை என்ற தவறான கருத்து உள்ளது.

ஆனால் உண்மை என்னவென்றால், தங்கள் மொபைல் எண்ணை ஆதார் உடன் பதிவு செய்யாத இந்திய குடிமக்கள் UIDAI இணையதளத்தில் லாக்-இன் செய்வதன் வழியாக தங்கள் ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்யலாம்.

மொபைல் நமபர் இல்லாமல் ஆதார் கார்ட்டை பதிவிறக்கம் செய்வதற்கான எளிய வழிமுறை இதோ:

 

- முதலில் UIDAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். அதாவது https://uidai.gov.in/ க்குச் செல்லவும்.

 

- ஹோம் பக்கத்திலிருந்து 'மை ஆதார்' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

 

- பின்னர் மை ஆதார்என்பதன் கீழ் ஆர்டர் ஆதார் ரீபிரிண்ட்' (Order Aadhar Reprint) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

 

- இப்பொது உங்கள் 12 இலக்க ஆதார் எண் / Unique Identification Number / UID / 16 இலக்க Virtual Identification Number / VID-ஐ வழங்கவும்.

 

- உங்கள் மொபைல் உங்கள் ஆதார் உடன் பதிவு செய்யவில்லை எனில் ‘My Mobile number is not registered' (எனது மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை) என்கிற விருப்பத்தேர்வில் உள்ள செக் பாக்ஸில் டிக் செய்யவும்.

 

- இப்போது உங்கள் மாற்று எண்ணை உள்ளிடவும் அல்லது பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணை உள்ளிடவும்.

 

- பின்னர் குறிப்பிட்ட எண்ணிற்கு OTP-ஐ அனுப்ப 'Send OTP' என்கிற டேப்-ஐ கிளிக் செய்யவும்.

 

- பின்னர் terms and condition (விதிமுறைகள் மற்றும் நிபந்தனை) செக்பாக்ஸை கிளிக் செய்யவும்

 

- இப்போது Submit (சமர்ப்பி) பட்டனை கிளிக் செய்யவும். அதன் பிறகு OTP அல்லது TOTP authentication( அங்கீகாரத்தை) முடிக்கவும்.

 

- அங்கே ஆதார் அட்டையை ரீபிரிண்ட் செய்ய மேலதிக சரிபார்ப்புக்காக Preview Aadhar Letter (ஆதார் கடிதத்தை முன்னோட்டமிடுங்கள்) என்கிற திரை இருக்கும்.

 

- இப்போது (Make payment) பணம் செலுத்து என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்

 

- பேமண்ட் வெற்றிகரமாக முடிந்த பிறகு, டிஜிட்டல் கையொப்பத்திற்கான PDF பார்மெட்டை பதிவிறக்கம் செய்யும்படி கேட்கப்படும்.

 

- எல்லாம் முடிந்த பிறகு, குறிப்பிட்ட சேவைக்கான கோரிக்கை எண் (Service Request Number) உருவாக்கப்பட்டு, அது எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

 

- ஆதார் கடிதம் அனுப்பப்படும் வரை உங்கள் SRN ஸ்டேட்டஸை நீங்கள் கண்காணிக்கலாம்.
Tamil Tech Solution

Hi Friends, Get the best how to tutorials for mobile devices and technology. Tamil Tech Solution offers latest tech news, tips, tricks, advices and more on smart phones, tablets, laptops and computers. Information technology is concerned with improvements in a variety of human and organizational problem-solving endeavors, through the design, development and use of technologically based systems and processes that enhance the efficiency and effectiveness of information in a variety of strategic, tactical and operational situations.

Post a Comment

Previous Post Next Post