புதிய E-filling portal 2.0 வலைத்தளம் வழியாக பான் - ஆதார் கார்ட்டை இணைப்பது எப்படி?

 பான் அட்டை மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடு 2022 மார்ச் வரை நீட்டிப்பு.. புதிய வருமான வரி இணையதளம் வழியாக பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது இப்போது இன்னும் சுலபம்.. அதெப்படி... இதோ முழு விவரங்கள்...


பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான புதிய கால வரம்பு
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 30-இல் இருந்து அடுத்த 2022 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சிபிடிடி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

எளிமையான மற்றும் படிப்படியான வழிமுறைகள் இதோ:

 

- புதிய வருமான வரி போர்ட்டலுக்கு (இ-ஃபைலிங் போர்டல் 2.0) செல்லவும். அல்லது https://www.incometax.gov.in/iec/foportal/ என்கிற வலைத்தளத்திற்குள் செல்லவும்

- Link Aadhar என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும்.

- இப்போது, நீங்கள் பான் எண், ஆதார் எண், ஆதார் மற்றும் மொபைல் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை உள்ளிட வேண்டும்.

 

- பின்னர் "எனது ஆதார் விவரங்களை சரிபார்க்க ஒப்புக்கொள்கிறேன்" (I agree to validate my Aadhar details) என்கிற டிக்பாக்ஸை டிக் செய்யவும்.

 

- இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் 6 இலக்க OTP-ஐ பெறுவீர்கள்.

 

- சரிபார்ப்பு பக்கத்தில் உங்களுக்கு வந்த OTP-ஐ உள்ளிட்டு 'சரிபார்க்கவும்' (Validate) என்பதை அழுத்தவும்.

 

- கிளிக் செய்தவுடன், பான் எண்ணை ஆதார் உடன் இணைப்பதற்கான உங்கள் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு பாப்-அப் மெசேஜ் கிடைக்கும், அவ்வளவுதான்!



Tamil Tech Solution

Hi Friends, Get the best how to tutorials for mobile devices and technology. Tamil Tech Solution offers latest tech news, tips, tricks, advices and more on smart phones, tablets, laptops and computers. Information technology is concerned with improvements in a variety of human and organizational problem-solving endeavors, through the design, development and use of technologically based systems and processes that enhance the efficiency and effectiveness of information in a variety of strategic, tactical and operational situations.

Post a Comment

Previous Post Next Post