கிசான் கிரெடிட் கார்டு உடனே பெறுவது எப்படி... 4% மலிவு வட்டியில் கடன்!

 விவசாய பெருங்குடி மக்களின் இன்னலை போக்கும் விதமாக கிசான் கிரெடிட் கார்டு (KCC) வழங்கும் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு சிறப்பு கடன் அட்டை வழங்கப்பட்டு, அதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்கப்படுகிறது.

 


குறுகிய கால கடன் வழங்குவதற்காக 1998இல் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இது தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் (NABARD) உருவாக்கப்பட்டது. இது விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடனை வழங்குகிறது. சரியாக தவணைத் தொகை மாத மாதம் செலுத்தி வந்தால், வெறும் 4% விழுக்காடு மட்டுமே வட்டி விகிதம் விதிக்கப்படும்.

 

மலிவான வங்கிக் கடன் வசதி (Low interest loans)

கிசான் கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்குவதன் மூலம் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு பணம் கிடைக்கும். இது தவிர, இப்போது கிசான் கிரெடிட் கார்டு திட்டம், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan) உடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

இதன்மூலம் 4% விழுக்காடு வட்டி விகிதத்தில் கிசான் கடன் அட்டையில் இருந்து ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். அதே நேரத்தில், PM Kisan பயனாளிகள் இந்த கடன் அட்டைக்கு விண்ணப்பிப்பதும் எளிதாகிவிட்டது. இந்த சேவைகளை வங்கிகளுடன் இணைந்து ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. அதிலும், பாரத ஸ்டேட் வங்கி இந்த திட்டத்திற்கு கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.

 

கிசான் கடன் அட்டை நன்மைகள் (Uses of Kisan Credit Card)

விவசாயிகள் பயிர்களை விதைப்பதற்கு வங்கிகளில் மிகக் குறைந்த வட்டியில் கடன் பெறுகின்றனர். இந்த கடன் கிசான் கிரெடிட் கார்டு மூலம் மட்டுமே வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உத்தரவாதமின்றி ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

 

அதே சமயம் ரூ.5-3 லட்சம் வரையிலான குறுகிய கால கடன்கள் 4% விழுக்காடு வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன. இந்த கடனுக்கு அரசு 2% விழுக்காடு மானியமும் வழங்குகிறது. மேலும், கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினால், 3 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

 

அந்த வகையில், இந்த கடன் வெறும் 4% விழுக்காட்டில் பயனாளிகளுக்குக் கிடைக்கும். ஆனால் கடனை திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், இந்த கடனுக்கான வட்டி விகிதம் 7% விழுக்காடாக உயரும் என்பதை மறந்து விடாதீர்கள்.

 

எஸ்பிஐ வங்கியில் கிசான் கடன் அட்டைக்காக விண்ணப்பிப்பது எப்படி (SBI KISAN CREDIT CARD)

எஸ்பிஐ கிசான் கடன் அட்டை பெற, உங்களுக்கு எஸ்பிஐயில் (SBI) கணக்கு இருக்க வேண்டும். உங்களின் வங்கிக் கிளைக்குச் சென்று கிசான் கடன் அட்டைக்காக விண்ணப்பிக்கலாம். இது தவிர, வீட்டிலிருந்தபடியே உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் பாரத ஸ்டேட் வங்கியின் பிரத்யேக செயலியான YONO ஐ பதிவிறக்கம் செய்து அதில் உள்நுழைந்து, கடன் அட்டைக்காக விண்ணப்பிக்கலாம்.

 

எஸ்பிஐ யோனோ (SBI YONO) செயலியைப் பதிவிறக்கம் செய்து, ஸ்மார்ட்போனில் நிறுவ வேண்டும்

அல்லது https://sbi.co.in/web/agri-rural/agriculture-banking/crop-loan/kisan-credit-card என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும்

உங்கள் லாகின் தகவல்களை கொடுத்து உள்நுழையவும்

பின்னர் YONO விவசாயம் என்ற பக்கத்திற்குச் செல்லவும்

அதன் பிறகு Khata என்பதைத் தேர்வு செய்யவும்

தொடர்ந்து கிசான் கடன் அட்டை மதிப்பாய்வு (KCC Reciew) பகுதிக்குச் செல்லவும்

இப்போது விண்ணப்பிக்கவும் (Apply) என்பதைக் கிளிக் செய்யவும் உங்கள் கோரிக்கையை பூர்த்து செய்யவும்

இந்த விண்ணப்ப முறைக்குப் பின், உங்கள் கணக்கு விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, வங்கியில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலர் உங்களை தொடர்பு கொண்டு தகவல்களை உறுதிபடுத்திக் கொள்வார். அனைத்து வெற்றிகரமாக முடிந்துவிட்டால், குறைந்தது 15 நாள்களுக்குள் உங்கள் கையில் Kisan Credit Card கிடைத்துவிடும்.

Tamil Tech Solution

Hi Friends, Get the best how to tutorials for mobile devices and technology. Tamil Tech Solution offers latest tech news, tips, tricks, advices and more on smart phones, tablets, laptops and computers. Information technology is concerned with improvements in a variety of human and organizational problem-solving endeavors, through the design, development and use of technologically based systems and processes that enhance the efficiency and effectiveness of information in a variety of strategic, tactical and operational situations.

Post a Comment

Previous Post Next Post