இந்திய தபால் துறையில் ஜிடிஎஸ் பணிக்கு எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?



1. இப்பணிக்கு கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதாது பத்தாம் வகுப்பு மார்க் மெரிட் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள். ஆதலால் பத்தாம் வகுப்பில் அதிக மார்க் எடுத்தவர்களுக்கு தான் இதில் முன்னுரிமை வழங்கப்படும்.

2. நீங்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் இடத்தில் பிரிவு வாரியாக அதாவது பிசி, எம் பி சி, எஸ்சி, எஸ்டி, பொதுப்பிரிவினர், பெண்களுக்கான முன்னுரிமை, விதவைப்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிரக்கும். அந்தந்த இடத்தில் பிரிவு வாரியாக பத்தாம் வகுப்பு மார்க் மெரிட் அடிப்படையில் மட்டும் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

3. ஒரு காலி பணியிடத்திற்கு நாலாபுறத்திலும் இருந்தும் விண்ணப்பிப்பார்கள். உதாரணமாக ஒரு காலி பணியிடத்திற்கு ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளார் என வைத்துக்கொள்வோம். அந்த ஆயிரம் பேரில் எவரொருவர் அதிக மார்க் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறாரோ அவருக்கே அந்த வேலை. ஒருவேளை ஒரே மார்க்கில் இரண்டு அல்லது மூன்று பேர் எடுத்து இருந்தால் பிறந்த தேதி, மாதம் மற்றும் வருடத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு அதிக வயது உடையவர் எவரோ அவருக்கே பணி வழங்கப்படும்.

ஜிடிஎஸ் பணியில் எந்தெந்த வேலைகள் அடங்கும்

1. அஞ்சல் வசதிகளின் ஒட்டுமொத்த மேலாண்மை

2. பதிவுகளை பராமரித்தல்

3. ஆன்லைன் பரிவர்த்தனைகளை உறுதி செய்தல்

4. அஞ்சல் சந்தைப்படுத்துதல்

5. கொள்முதல்
Tamil Tech Solution

Hi Friends, Get the best how to tutorials for mobile devices and technology. Tamil Tech Solution offers latest tech news, tips, tricks, advices and more on smart phones, tablets, laptops and computers. Information technology is concerned with improvements in a variety of human and organizational problem-solving endeavors, through the design, development and use of technologically based systems and processes that enhance the efficiency and effectiveness of information in a variety of strategic, tactical and operational situations.

Post a Comment

Previous Post Next Post