ONGC recruitment 2022 - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், ரூ.87, 000 சம்பளத்தில் வேலை





·         எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில்  (ONGC)  அதிகாரம் சாரா (Non-Executive Officer) பதவிக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

·         மொத்த காலிப்பணியிடங்கள்: 992

·         பதவியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது, நிர்வாக காரணங்களால் அதிகரிக்கவோ, குறையவோ கூடும்.

·         சென்னை மற்றும் புதுச்சேரியில் 38 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

 

வயது வரம்பு:

Drilling/Cementing/Production - Drilling தவர இதர F1 மற்றும் A1 பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 28.05.2022 அன்று 30-க்கு கீழ் இருக்க வேண்டும்.  குறைந்தபட்ச வயது 18-க்கு மேல் இருக்க வேண்டும். W - 1 நிலை பதவிகளுக்கு வயது வரம்பு 18-27 ஆக இருக்க வேண்டும். இளநிலை கனரக வாகன இயந்திர செய்குநர் பதவிக்கு வயது வரம்பு 18-35 ஆக இருக்க வேண்டும். 

 

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

 

கல்வித் தகுதி: 

இளநிலை பொறியாளர் (உதவி)  ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் 3 ஆண்டு பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.  இளநிலை டெக்னிசியன் ஆகிய பணியடங்களுக்கு பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  இத்துடன் துறை  சார்ந்த திறன் சான்றிதழ் (Trade Certificate) பெற்றிருக்க வேண்டும்.

 

ஆன்லைன் மூலமாக 28.05.2022 இரவு மணி 11.59 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பிக்க மற்றும் முழு விபரங்களை தெரிந்து கொள்ள இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்.

https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/76282/Instruction.html

 

சம்பளம் :

F - 1 பதவிக்கு: 29,000 – 98,000/-

A - 1 பதவிக்கு: 26,600 – 87,000/-

W – 1 பதவிக்கு: 24,000 – 57,000/-

Tamil Tech Solution

Hi Friends, Get the best how to tutorials for mobile devices and technology. Tamil Tech Solution offers latest tech news, tips, tricks, advices and more on smart phones, tablets, laptops and computers. Information technology is concerned with improvements in a variety of human and organizational problem-solving endeavors, through the design, development and use of technologically based systems and processes that enhance the efficiency and effectiveness of information in a variety of strategic, tactical and operational situations.

Post a Comment

Previous Post Next Post