Pm-kisan திட்டத்தில் இணைந்திருப்பவர்கள் அனைவரும் இந்த இ கே ஒய் சி அப்டேட் செய்யப்பட வேண்டும். இந்த அப்டேட் செய்ய மே 31 2022 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் தொடர்ந்து பயன்பெற இந்த அப்டேட் கட்டாயம்.
இத்திட்டத்தின் பயன்கள்:
1. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஒவ்வொரு 4 மாத இடைவெளியிலும் தலா 2000 ரூபாய் என வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
2. Pm-kisan இல் இணைந்து இருப்பவர்களுக்கு பிஎம் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது.
3. இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி விதை, உரம் மற்றும் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வட்டியில்லாமல் கடன் வாங்கி அதை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி செலுத்தலாம்.
இ கே ஒய் சி அப்டேட் செய்யும் படிகள்:
1. கூகுளில் pm-kisan என்று search செய்யுங்கள் அல்லது pmkissan.gov.in என்ற வலைதளத்திற்கு செல்லவும்.
2. கீழே swipe செய்து வந்தால் e kyc update New என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
3. பிறகு உங்கள் ஆதார் நம்பரை உள்ளிடவும். அடுத்து சர்ச் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
4. ஆதார் கார்டில் இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணை உள்ளிடவும். அந்த தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP சென்றடையும். அந்த OTPயை OTP ஆப்ஷனில் உள்ளிடவும்.
5. SUBMIT என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்பொழுது "வெற்றிகரமாக இ கே ஒய் சி அப்டேட் செய்யப்பட்டது" என்ற தகவல் உங்களுக்கு கிடைக்கும்.
Tags:
Government Scheme